விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்

ad+1

மட்டக்களப்பு மாவட்டத்தில்   உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்,  இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு காலை 7மணி தொடக்கம் வாக்களிப்புக்கள் சுமூகமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலும் இவ் வாக்களிப்பு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, 2 நகர சபை 9 பிரசே சபைகள் அடங்கிய 12 சபைகளுக்குமான தேர்தல் சுமூகமான முறையில் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெற்றுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான மா.உதயகுமார்  தெரிவித்தார்.


தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையம் மட்டக்களப்பு, இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தல் பணிகளுக்கென வெளிமாவட்டங்களிலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் வருகைதந்த 4437 உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









0 comments: