வாக்குகளைப் பெறுவதற்கு மதுபானம் வழங்குவதாக குற்றச்சாட்டு

ad+1

வாழைச்சேனையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வாக்குகளைப் பெறுவதற்கு மதுபான போத்தல்களை வழங்குவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் தனது வாக்கை அளித்து விட்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “வாக்களிக்கும் நிலையத்துக்கு அருகாமையில் சில வேட்பாளர்கள் நின்று கொண்டு, வாக்களிக்க வரும் மக்களிடம் தங்களுடைய சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கூறி வருகின்றனர்” என்றார். மேலும், இதனைப் பொலிஸாரும் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது கவலையளிப்பதாகவும் தேர்தல் கண்காணிப்பு பகுதி இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.



0 comments: