நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டுகள் வெடிப்பு 9 குண்டுகள் வெடிக்கும் முன்னர் மீட்பு

ad+1

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவு புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகத்தின் மீது திங்கட்கிழமை அதிகாலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குண்டுவெடிப்பில் அலுவலகத்திற்கு சிறிதளவான சேதமும் ஏற்பட்டுள்ளதுடன், நேரக் கணிப்புக் குண்டு மூலமே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு குற்றத்தடயவியல் பிரிவு பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.சம்பவம் இடம்பெற்ற கட்சி அலுவலகத்திற்குச் சென்ற காத்தான்குடி பொலிஸார் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர், மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி கட்சி அலுவலகத்தில் வெடிக்காத நிலையிலும் சில நேரக் கணிப்புக் குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட ஏனைய 9 குண்டுகளும் வெடித்திருந்தால் அப்பகுதியில் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது காத்தான்குடி நகர சபைக்காக போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அங்கு 5,815 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தனர்.

சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments: