மாலபே சைட்டம் மருத்துகக் கல்லூரியின் பெயரை மாற்றும் செயல் சிறுபிள்ளைத்தனமானது! - பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிப்பு

ad+1

மாலபே சைட்டம் மருத்துகக் கல்லூரியின் பெயரை மாற்றும் செயல் சிறுபிள்ளைத்தனமானது! - பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிப்பு


'மருத்துவப் படிப்பபை பணத்துக்கு விற்பனை செய்தால், பணம் படைத்தவர்களுக்கு வழங்கும் சலுகையாகவே அமையும். ஏழைகளைக் காப்பற்றுவதற்கும் எமது பெற்றோர், மாணவர்களைக்  காப்பாற்றுவதற்கும் சைட்டத்தை உடனடியாக தடை செய்யுங்கள்' என கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போத தெரிவித்தனர்.

மாலபே சைட்டம் தனியார் மருத்துகக் கல்லூரியின் பெயரை மாற்றம் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்தும், சைட்டத்தை உடனடியாக மூடிவிட வேண்டுமெனக் கோரியும், கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தின் முன்னால் பிரதான வீதியோரம் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதே மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.

(படம் - சபேஷ்)


அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

'வறுமைக்கு மத்தியிலும் கல்விகற்று மருத்துவத் துறைக்குள் நுளையும் மாணவர் மத்தியில் பணம் கொடுத்து கல்விபயின்று மருத்துவத்தை வாங்கினால் அது எம்மைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு செய்யும் மிகப் பெரும் துரோகமாகும்.

இந்த தனியார் கல்லூரியின் பெயரை மாற்றினால் செயற்பட வைக்கும் திட்டம் என்பது எங்களை ஏமாற்றும் செயலாகும், இது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்'. எனவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

0 comments: