மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிப பெண் பலி

ad+1

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவு தேற்றாத்தீவு எனுமிடத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தேற்றாத்தீவு பழைய தபாலக வீதியைச் சேர்ந்த குமாரசாமி பூபதிப்பிள்ளை (வயது 71) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.


இம்மூதாட்டி மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையைக் கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன் மூதாட்டி மீது மோதியதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது.

மூதாட்டி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய திருகோணமலையைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கி மரணித்த மூதாட்டி சந்தையில் மரக்கறி விற்பனை செய்து வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்பவர் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவு ஜெயபுரம் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்தததுடன் மற்றுமொருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பெற்றோல் பவுசருடன், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர்  மோதியதில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பயணித்த கிண்ணியா, மணியரசங்குளம் பகுதியைச் சேர்ந்த  எஸ்.எம். இக்பால் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். அவருடன் கூடச் சென்ற மற்றொருவர் படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்;கப்பட்டுள்ளார்.

பெற்றோல் பவுசரை முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பாக பெற்றோல் பவுசர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார்  முன்னெடுத்துள்ளனர்.


0 comments: