இடைக்கால அறிக்கை பற்றி விளங்காமல் சிலர் விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்! - மட்டக்களப்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

ad+1

பல வழிகளிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றது. அதற்கான காரணங்கள் எப்படி சொல்லப்படுகின்றது என்றால், இவர்கள் அரசாங்கத்தோடு இணைந்துகொண்டு தமிழ் மக்களுடைய அந்த இறைமையை விலைபேசி விட்டார்கள் என்று சொல்லுகின்ற சந்தர்ப்பங்களை சிலர் உருவாக்கியிருக்கிறார்கள்.அந்த இறைமையை அடைமானம் வைத்து விட்டார்கள் என்று சொல்பவர்களிடம் நான் திருப்பிக் கேட்கின்றேன், அதை உதாரணப்படுத்திச் சொல்லுங்கள் என்று. என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அதிகார சபைகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம்  திங்கட்கிழமை 1ஆம் திகதி பிற்பகல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்  தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் மட்டக்களப்பு, தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், இன்று மகிந்தராஜபக்ச எதிரணியில் 51பேருடன் இருக்கின்றார், அவருக்கு இந்த எதிர் கட்சி தலைவர் பதவி கொடுக்கவில்லை, ஏன் என்றால் அவர்கள் சிறிலங்க் சுதந்திரகட்சியில் போட்டியிட்டவர்கள். அவர்களை எதிர் கட்சியாக பார்க்க முடியாது.எங்கள் மக்கள் ஆணையினால் 16 எம்பிக்களை கொடுத்தார்கள் இந்த கௌரவம், எதிர்கட்சி பதவி என்கிற கௌரவம் கிடைத்திருக்கின்றது. இது தமிழ் மக்களுக்கு கிடைத்த கௌரவமே தவிர இந்த அரசாங்கம் கொடுத்த பிச்சையல்ல. இந்த கௌரவம் கொடுத்தல் சரணாகதி அடைந்துவிட்டோம் என்று சொல்வது முட்டாள்தனம்.


நாங்கள் இந்த அரசாங்கத்திடம் கால் வருடி செல்லவில்லை, சிலர் சொல்கின்றார்கள் எதிர் கட்சி பதவி வழங்கியதால் அதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கின்றோமாம். எதை விட்டுக்கொடுத்தோம். ஒன்று சொல்கின்றேன் இடைக்கால அறிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக ஒரு தனி அறிக்கையே இருக்கின்றது. வடக்கி கிழக்கு இணைப்பு, சமஷ்டி முறை இப்படி முக்கியமான எங்களது அடிப்படை உரிமை சம்மந்தமான விடயங்கள் அதில் இருக்கின்றது. என்பதை இன்றும் சிலர் விளங்கிக் கொள்ளாமல் விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். என தெரிவித்தார்.


0 comments: