அதி­கா­ரப்­ப­கிர்வு மாத்­திரம் பிரச்­சி­னைக்கு தீர்­வல்ல : மனோ கணேசன்

ad+1

அதி­கா­ரப்­ப­கிர்வு மூல­மாக மாத்­திரம் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது ஒரு­போதும் சாத்­தி­ய­மா­காது. கடந்த கால தவ­று­களை திரும்­பிப்­பார்­த்து விடப்­பட்ட தவ­றுகள் அனைத்தும் சரி­செய்­யப்­பட வேண்டும் என தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.
வடக்­கிலும், தெற்­கிலும் இருந்து நாட்­ டினை பிரிக்கும் எந்த செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் அதனை நாம் தடுத்து நாட்­டினை ஒன்­றி­ணைப்போம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.ஒன்­றி­ணைத்த மதச் சக­வாழ்வு மாநாடு நேற்று கொழும்பு பண்­டா­ர­ந­யாக ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் அமைச்சர் மனோ கணேசன் உரை­யாற்றும் போதே இதனைத் தெரி­வித்தார்.

பெளத்த  மாநா­யக தேரர்கள், இந்து மதத் தலை­வர்கள், கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய மதத் தலை­வர்கள் மற்றும் அர­சியல் பிர­மு­கர்கள் சிவில் மற்றும் சர்­வ­தேச பிர­தி­நி­திகள் என அனை­வரும் கலந்­து­கொண்ட   இந்த மாநாட்டில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறப்பு அதி­தி­யாக கலந்­து­கொண்டார். 

மாநாட்டில் அமைச்சர் மேலும் உரை­யாற்­று­கையில்

நாட்டின் ஆட்­சி­யினை சரி­யான பாதையில் கொண்டு செல்ல அர­சாங்­க­மாக நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். அர­சியல் அமைப்­பினை அடிப்­ப­டை­யாக கொண்டு நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். ஜனா­தி­பதி தலை­மையில் அரச இயந்­திரம் செயற்­பட்டு வரு­கின்­றது. எனினும் அதையும் தாண்டி மதத் தலை­வர்­களின் தலை­மைத்­து­வமும்,  வழி­காட்­டலும் எமக்கு தேவைப்­ப­டு­கின்­றது. நாம் மத சக­வாழ்வு மாநாட்­டினை நடத்தும் நிலையில் இதில் முக்­கி­ய­மான சில விட­யங்­களை கருத்தில் கொண்டு செயற்­பட்டு வரு­கின்றோம். குறிப்­பாக " அர­சியல் அதி­கார இலக்கில் ஆயுதம் தூக்­கா­தி­ருப்போம்" , " இலங்­கையர் எம் அடை­யாளம் பன்­மைத்­துவம் எம் சக்தி ", " வர­லாற்றை திரும்­பிப்பார், தவ­று­களைத் திருத்­திக்கொள்" " ஓர் நாட்டில் அனை­வ­ருக்கும் அதி­காரம்" என்ற பிர­தான நான்கு கார­ணி­களை தொனிப்­பொ­ரு­ளாக கொண்டே நாம் எமது பய­ணத்­தினை ஆரம்­பித்­துள்ளோம்.

இந்த நாட்டின் உரி­மை­களை வென்­று­கொள்ள வடக்­கிலும் சரி தெற்­கிலும் சரி இனி­யொ­ரு­போதும் ஆயுதம் எந்தக் கூடாது என்­பது எமது இலக்­காகும்.  அத்­துடன் எமது வர­லாற்றை திரும்­பிப்­பார்த்தல் அதில் தவ­ற­விட்ட விட­யங்­களை திருத்­திக்­கொண்டு சரி­யான பாதையில் பய­ணிக்க வேண்டும் என்ற கட்­டா­யமும் உள்­ளது. மேலும்  ஒரே நாட்­டுக்குள் அதி­கா­ரங்­களை பகிர்ந்­து­கொண்டு முன்­னோக்கி செல்ல வேண்டும். நாட்டில் பிரி­வினை, இன­வாதம், ஆயுத மோதல் அனைத்­தையும் முடி­வுக்கு கொண்­டு­வந்து அதி­கா­ரங்­களை அனை­வ­ருக்கும் பகிர்ந்து வழங்க வேண்டும். கடந்த காலங்­களில் ஆட்­சியில் இருந்த அர­சாங்­கங்கள் கொழும்பை அடிப்­ப­டை­யாக  கொண்டு அதி­கா­ரங்­களை குவித்­துக்­கொண்டு ஆட்சி செய்­தது.

இப்­போது அதி­கா­ரங்­களை பர­வ­லாக்கி ஆட்சி செய்து வரு­கின்றோம். அதி­கார பகிர்வு தான் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு என்றால் அது ஒரு­போதும் சாத்­தியம் ஆகாது. அதை என்னால் ஏற்­றுக்­கொள்­ளவும் முடி­யாது. ஜன­நா­யக நாட்டில் மேற்­கூ­றப்­பட்ட நான்கு விட­யங்­களும் உள்­ள­டக்­கப்­பட  வேண்டும் அப்­போதே பயணம் இல­கு­வாகும்.

தேசியக் கோடி,  தேசிய அடை­யாளம், அர­சியல் அமைப்பு என்­பதை  அடிப்­ப­டை­யாக கொண்டே அனை­வரும் செயற்­பட வேண்டும். ஜனா­தி­பதி முதல் பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் வரை இதனை ஏற்­று­கொள்ள வேண்டும். எனினும் அண்­மையில் வடக்கில் மாகா­ண­சபை உறுப்­பினர் ஒருவர் தேசிய கோடியை ஏற்ற  மாட்டேன் என்ற வகையில் செயற்­பட்­டி­ருந்தார். இது மிகவும் மோச­மான செயற்­பா­டாகும். நாம் அப்­போதே இதனைக் கண்­டித்­தி­ருந்தேன். அதேபோல் தெற்­கிலும் சில காலத்­திற்கு முன்னர் சிறு­பான்மை மக்­களின் அடை­யா­ளங்­களை நீக்­கிய தேசிய கொடி­யாக ஒன்றை ஏந்­தி­யி­ருந்­தனர். இதுவும் கண்­டிக்­கத்­தக்க விட­ய­மாகும். வடக்­கிலும் தெற்­கிலும் இன­வா­தத்தை தூண்டும் செயற்­பா­டுகள் உள்­ளன. அர­சியல் தீவி­ர­வா­திகள், இன­வா­திகள், அடிப்­ப­டை­வா­திகள் இரு தரப்­பிலும் இருந்து செயற்­பட்டு வரு­கின்­றனர்.

0 comments: