காஞ்சிரங்குடா யுவதிகளின் மட்பாண்ட உற்பத்திப் பொருட் கண்காட்சியும் விற்பனையும்

ad+1

ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் அனுசரணையுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தின் காஞ்சிரங்குடா கிராம யுவதிகளால் உள்ளூர் வளங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் சிறு கைத்தொழில் திட்டத்தின் மட்பாண்ட கைப்பணிப் பொருட் கண்காட்சியும் விற்பனையும் பிரதேச செயலக வளாகத்தில் வியாழக்கிழமை 30ஆம் திகதி நடைபெற்றது.

 

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி திட்டப் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ், காஞ்சிரங்குடா பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

​​
படித்துவிட்டு விட்டிலிருக்கும் யுவதிகள் மற்றும் பாடசாலைகல்வியை இடைநிறுத்தி தொழிலற்று இருக்கும் யுவதிகளை ஒன்றிணைத்து இதுதொடர்பில் வவுணதீவு பிரதேச செயலகம் ஊடாக பயிற்சியளிக்கப்பட்டு அவர்கள் வரமானத்தை ஈட்டும் பொருட்டு இத்திட்டம் செயற்படுத்தப்பள்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments: