கட்டுப் பணம் செலுத்தியது ஈ.பி.டி.பி

ad+1

திருகோணமலை மாவட்த்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) செலுத்தியுள்ளது.


உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், திருகோணமலை பட்டணமும் சூழலும் (உப்புவெளி) மற்றும் தம்பலகாமம் ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தைத் தாம்   29.11.2017 அன்று  செலுத்தியதாக, மாவட்டபொறுப்பாளர்  த.புஸ்பராஜா தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் தம்பலகமம், மற்றும் உப்புவெளி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments: