பால்மா பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன

ad+1

அம்பாறை, கல்முனை பிரதேசத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பால்மா பக்கெட்டுகள், செவ்வாய்க்கிழமை (28) இரவு கைப்பற்றப்பட்டுள்ளனவென, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.ஒரு பெட்டியில்  400 கிராம்  பால்மா பக்கெட்டுகள் 36 அடங்கிய  89 பெட்டிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த பால்மா பக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டு உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பால்மா பக்கெட்டுகள், கல்முனைப் பிரதேசத்திலுள்ள மொத்த விற்பனைக் கடையொன்றில் இருந்து கடந்த  19ஆம் திகதி களவாடப்பட்டதாக இருக்கலாமென, பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.


0 comments: