‘இணைந்த வடகிழக்கு என்பதில் உறுதியாக இருக்கின்றோம்’

ad+1

“வடக்கு–கிழக்கு என்பது எங்களது தாயக பூமியாகும். வட, கிழக்கு மக்கள் இணைந்தே, போராட்டத்தைச் சந்தித்திருக்கின்றோம். அரசாங்கம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இணைந்த வடகிழக்கு என்பதில் உறுதியாக இருக்கின்றோம்” என, வட மாகாண மகளிர் விவகார, புனர்வாழ்வு மற்றும் சமூகசேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

அம்பாறை, கல்முனை குறுந்தையடி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் பொதுமக்களை, நேற்று (29) நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாறும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கொடிய யுத்தத்தால் வடக்கு மக்களை விட சிலநேரம் கிழக்கு மக்கள்  அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

“புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தின் மூலம் 25 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கின்றோம். இது இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்.

“பெண்கள் தமது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக எமது கலாசார விழுமியங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்வரவேண்டும்.


“குறிப்பாக, உள்ளூராட்சி தேர்தலில் இங்குள்ள மக்கள் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக, எமது வரிப் பணங்களை கொண்டு எமது அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும்.

“இந்த வீட்டுத்திட்டத்தில் வாழும் மக்கள் குடிப்பதற்கு கூட சுத்தமான நீர் இன்றி கஸ்டப்படுவது வேதனையைத் தருகின்றது. இதனை நான் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வேன்.

“கல்முனை பகுதியை பொறுத்தவரையில் சாய்ந்தமருது மக்கள் தங்களை தாங்களே ஆழ வேண்டும் என்ற போராட்டம் நியாயமானது. அவர்களுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை வழங்குவதற்கு, ஜனாதிபதி முன்வரவேண்டும்.

“கல்முனையில் ஓர் இனம் இன்னொரு இனத்தை அடக்கி ஆழ முடியாது. இதற்கு நீங்கள் உங்கள் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து, மாநாகர சபைக்குக் கூடுதலாக அனுப்ப வேண்டும்” என்றார்.

0 comments: