கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளம் தகவல்கள், தரவுகள் இன்றி வெறுமையாக உள்ளன.

ad+1

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் என்பவற்றிற்கு தனித்தனியான இணையத் தளங்கள்  உள்ளபோதும் அவற்றில் எவ்விதமான தகவல்களோ, தரவுகளோ இன்றி அவை வெறுமையாக உள்ளதாக இலங்கைக் கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வியாழக்கிழமை 30.11.2017 விவரம் தெரிவித்த அச்சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் ஏ.எல். முஹம்மத் முக்தார் மேலும் கூறியதாவது,

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியவற்றில்  தகவல் தொடர்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் மேற்படி இரு நிறுவனங்களினதும் இணையத் தளங்கள் தகவல்கள் இன்றி வெறுமையாகக் காணப்படுவது அதிருப்தி அளித்துள்ளது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் என்பவற்றிற்கு தனித்தனியான இணையத் தளங்கள் இருந்த போதும்  அவ்விணையத் தளங்களில் எவ்வித தகவல்களையும் கல்வித் துறையில் கடமையாற்றுபவர்களோ அல்லது பொதுமக்களோ பெற முடியாதுள்ளது பெருங் குறைபாடாக உள்ளது.

உண்மையில் இவ்விரு இணையத் தளங்களிலும் கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் தகவல்கள், கல்வித்துறை சம்பந்மான சுற்று நிருபங்கள், பரீட்சைகள், பெறுபேறுகள், ஆளணி வெற்றிடங்கள், பதவி உயர்வுகள், அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், கல்வித்துறை அடைவுகள் உள்ளிட்ட எந்தத் தகவல்களும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

இந்நிலைமை கிழக்கு மாகாணத்திலுள்ளவர்களுக்கு மட்டுமல்ல ஏனைய மாகாணங்களிலுள்ளவர்களின் கிழக்கு மாகாணக் கல்வித் துறை சம்பந்தமான தகவல் தேடல்களுக்கும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு குறைபாடுகளைச் சீர் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.


0 comments: