மட்டு. கல்லடி ஹரி சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பாராட்டு -

ad+1கல்லடி ஹரி சிறுவர் இல்லத்திலிருந்து கல்வி பயின்று பல்வேறு துறைகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு ஹரி சிறுவர் இல்லத் தலைவர் திரு.எஸ்.சந்திரகுமார் அவர்களின் தலைமையில் 10.12.2017 அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார். இதன்போது ஹரி இல்லத்தினால் அரசாங்க அதிபருக்கு நினைவு மடல் வழங்கப்பட்டதுடன் கல்லடி பெருமுகர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

சாதனை படைத்த மாணவர் விபரம்:
திரு.இராஜகுணலிங்கம் வினோத் - யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
திரு.லெட்சுமணன் அனுஜன் - கிழக்குப் பல்கலைக்கழகம்
திரு.செல்வராசா ரசிகரன் - பேராதனைப் பல்கலைக்கழகம்
திரு.அம்பலவாணன் டிலக்ஷன் - கிழக்குப் பல்கலைக்கழகம்

0 comments: