கருவேப்பங்கேணி நாகதம்பிரான் ஆலய முன்றலில் நின்ற ஆலமரம் விசமிகளால் வெட்டப்பட்டுள்ளது

ad+1

மட்டக்களப்பு, கருவேப்பங்கேணி சிவ நாகதம்பிரான் ஆலய முன்றலில் நின்ற ஆலமரம் ஒன்று சில விசமிகளால் கொட்டும் மழை பெய்யும்போது வெட்டி சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கருவேப்பங்கேணி சிவ நாகதம்பிரான் ஆலய வளாகத்தில் ஆலய நிருவாகத்தினரால் நடப்பட்டு கடந்த 13 வருடங்களாக பராமரித்துவந்த ஆலமரத்தை வெட்டி சரித்துள்ளனர்.

ஆலமர ஓரத்தில் புகையிரதக் வீதியில் வேலையற்று பொழுதைக் கழிக்கும் வேறு பிரதேசத்திலிருந்து வந்த சில இளைஞர்களே இதை வெட்டியிருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர்.

ஆலய வௌி வளாகத்தில் மாலை நேரங்களில் சில இளைஞர்கள்  கடந்த சில வருடங்களாக விளையாட்டில் ஈடுபட்டுவந்ததாகவும் அவர்களுக்கு இம் மரம் தடையாக இருந்ததால் வெட்டப்பட்டிருக்கலாம் எனவும் சில தகவல்கள் அறியக்கிடைக்கின்றது.

விளையாட்டுக்கென ஒதுக்கப்பட்ட மைதானம் ஆலயத்தின் பின்னால் ஓரே வேலிக்கு அப்பால் உள்ளது. (அருகில்)இருப்பினும் இக் குறிப்பிட்ட வேறு கிராமங்களிலிருந்து வரும் இளைஞர்களும் கருவேப்பங்கேணி கிராம இளைுர்களும் இணைந்து மேற்படி புகையிரதத் திணைக்களத்தால் ஒதுக்கப்பட்டு ஆலய பராமரிப்பில் இருந்த காணியையே பொழுதுபோக்காக விளையாடி வந்த நிலையிலேயே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆலமரம் வெட்டப்பட்டது தொடர்பில் சூழல் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் ஒன்றினால் சட்ட நடவடிக்கைக்காக முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இச் சம்பவத்திற்கு கருவேப்பங்கேணி இளைஞர்கள் கடும் கண்டனத்தை வௌியிட்டுள்ளனர்.0 comments: