போலி நாணயத்தாளுடன் இருவர் கைது

ad+1

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக்கண்டிப் பகுதியில் 1,000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இன்று (01) காலை இருவர் கைதுசெய்யப்பட்டுள்னரென, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.நிலாவெளியைச் சேர்ந்த 29 வயதுடைய புஹாரி முகம்மது றிஸாட், அப்துல் ஹஸன் றிஸ்வான் என்ற குடும்பஸ்தர்கள் இருவருரே, இவ்வாறு ​கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நிலாவெளி கடற்படையினரின் இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், போலி நாயணத்தாள்களுடன் குச்சவெளிப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


0 comments: