தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது

ad+1


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, கிளிநொச்சி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை, கிளிநொச்சிய மாவட்டச் செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று (13) செலுத்தியுள்ளது.கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இங்கு கருத்துத் தெரிவித்த கரைச்சி பிரதேச சபை முதன்மை வேட்பாளரும், த.தே மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளருமான தங்கவேல் ஜெகதீஸ்வரன் கூறியதாவது,

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முதல் முதலாக பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடுகின்றது. இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்களுக்கு எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில், நாம் மக்களின் அவிருத்தி மற்றம் உரிமைகளூக்காக தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (புதன்கிழமை) கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.


0 comments: