சடலத்தை இனங்காட்டுமாறு மக்களிடம் வேண்டுகோள்

ad+1

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி குரூஸ் நீர்த்தேக்க கால்வாயிலிருந்து கடந்த 08ம் திகதி வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை இனங்காணுமாறு பொது மக்களை சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அசார் இன்று  (11) தெரிவித்தார்.


குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பொதுக்களால் சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சடலம்  மீட்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்கவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.கண்டெடுக்கப்பட்ட சடலம் அம்பாறை பொது வைத்தியசாலை பிரேர அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இச் சடலத்தை பொது மக்கள் இனங்காணுமாறும் அவர் கேட்டுள்ளார்.

கறுப்பு நிற பொட்டன் எனும் காற்சட்டையும், வெள்ளை நிற சேட்டும் அணிந்த நிலையில் சடலத்தின் இடது கையில் இரண்டு காப்புக்கள் அணிந்து காணப்படுகிறது.


0 comments: