4 மன்றங்களுக்கும் 28 பெண் வேட்பாளர்கள்

ad+1

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 4 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 28 பெண் வேட்பாளர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


இவற்றில், ஏறாவூர் நகர சபைக்கு 5 பெண் வேட்பாளர்களும் செங்கலடி பிரதேச சபைக்கு 10 பெண்  வேட்பாளர்களும், மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு 5 பெண் வேட்பாளர்களும் வாழைச்சேனை பிரதேச சபைக்கு 8 பெண் வேட்பாளர்களும் அவசியமாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எறாவூர் நகர சபைக்கு 16 பேரைத் தெரிவு செய்வதற்காக, 19 வேட்பாளர்களும்; செங்கலடி பிரதேச சபைக்கு 30 பேரைத் தெரிவு செய்வதற்காக, 33 வேட்பாளர்களும்; வாழைச்சேனை பிரதேச சபைக்கு 23 பேரைத் தெரிவு செய்வதற்காக, 26 வேட்பாளர்களும்; மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு 16 பேரைத் தெரிவு செய்வதற்காக, 19 பேரையும் கொண்டதாக, இப்பட்டியல் இருக்க வேண்டும்.

இதற்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 1,500 ரூபாயும் சுயேட்சைக்குழுவாகப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 5,000 ரூபாயும் கட்டுப்பணமாகச் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


0 comments: