ad+1



தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2017ம் வருடம் ஜனவரி – ஜூன் வரைக்குமான ஆறு மாத கால பாடநெறியை பூர்த்திசெய்த புதுக்குடியிருப்பு பயிற்சி நிலையத்தின் 105 பயிற்சியாளர்களுக்கும் மற்றும் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தின் 52 பயிற்சியாளர்களையும் உள்ளடக்கியவகையில் அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் மாகாணரீதியிலான நிகழ்வு புதுக்குடியிருப்பு இளைஞர் தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ந. குகதாஸ் அவர்களின் தலைமையில் கிரான்குளம் சீ மூன் கொட்டலில் 10.12.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.



இவ்விழாவின் முதன்மை அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் அவர்களும் விசேட அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்குமாகாணப்பணிப்பாளர் . சிசிரகுமார மற்றும் முன்பள்ளி ஆசிரியர் கிழக்குமாகாண தவிசாளரும் முன்னாள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்குமாகாணப்பணிப்பாளருமான பொன். செல்வநாயகம் , சிறப்பு அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஹமீர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்குமாகாண நிருவாக உத்தியோகத்தர் P. தியாகராஜா , புதுக்குடியிருப்பு கண்ணகிமகாவித்தியாலய அதிபர் வே.தட்சணாமூத்தி , கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி லதீப் ,முன்னாள் புதுக்குடியிருப்பு பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி சி. நடேசகுமார் மற்றும் தகவல் நிலைய உத்தியோகத்தர் மகேந்திரராஜா மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் ஆகியோர் விழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர்.










0 comments: