பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் 138ஆவது ஜயந்தி மகோற்சவம்

ad+1

பகவான் ஸ்ரீ ரமண மகரிசியின் 138ஆவது ஜயந்தி மகோற்சவம் ரமண மகரிசி அறப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 03ஆம் திகதி புதன்கிழமை காலை மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர்முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ளதென மன்றத்தின் இலங்கைக்கிளைத் தலைவர் மா.செல்லத்துரை தெரிவித்தார். 
 
ஈழத்து திருச்செந்தூர்முருகன் ஆலய பிரதம குரு சபரீச சைத்தன்யர் தலைமையில் நடைபெறவுள்ள மகோற்சவத்தில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொள்கிறார். 

 சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கு.குணநாதன், மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளர் நா.தனஞ்சயன் ஆகியோரும், அழைப்பு அதிதிகளாக மாவட்ட இந்த கலாசாரஉத்தியோகத்தர் கி.குணநாயகம், பொலநறுவை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஆ.லெவ்விதன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்

0 comments: