10 நாட்களாக மூதாட்டியைக் காணவில்லை

ad+1

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கொண்டையன்கேணிக் கிராமத்திலிருந்து வாழைச்சேனை பேத்தாழைக் கிராமத்திற்குச் சென்ற நாகமணி மாதம்மை (வயது 72) எனும் மூதாட்டியைக் காணவில்லை என வாழைச்சேனைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.கடந்த 17ஆம் திகதி காலை 9 மணியளவில் கொண்டையன்கேணியிலுள்ள மகள் புவனேஸ்வரியின் வீட்டிலிருந்து வாழைச்சேனை, பேத்தாழையிலுள்ள தேவாலயம் ஒன்றிற்கு இவர் கால்நடையாகப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஆனால், சில நிமிட நேர நடைப் பயணத்தில் தேவாலயத்திற்கு சென்று சேர்ந்திருக்க வேண்டிய அவர் கடந்த 10 தினங்களாகியும் காணாமல் போயுள்ளார் என்றும் பல இடங்களிலும் தேடிப் பார்த்தபோதும் இதுவரை எந்தத் தகவலும் கிட்டவில்லை என்றும் உறவினர்கள் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

மகள் புவனேஸ்வரியின் வீட்டிலிருந்து புறப்படும்போது தனது தாய் கடைசியாக நீல நிற சாறி அணிந்திருந்ததாக காணாமல்போன மூதாட்டியின் மகன் கே. நல்லதுரை (வயது 37) தெரிவித்தார்.

தமது தாயைப்பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் தயவுடன் 0776437199, 0779408064 என்ற இலக்கங்ளோடு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு அவரது மகன்கள் கேட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.0 comments: