மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரியில் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல்!

ad+1

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாளான இன்று மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில்  ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுமாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,  உள்ளிட்ட பல நூற்றுக் கணக்கானோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் இத்துயிலுமில்லத்தில் வெளிப்படையாக மாவீரர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் ஒன்றுதிரண்டு ஈகைச் சுடர் ஏற்றுவது இதுவே முதற்தடவையாகும் என்பதும் குறிப்பிட்டத்தக்கதாகும்.

0 comments: