கிழக்கு மாகாணத்தைத் தழுவியதாக இந்தியத் துணைத் தூதரகமொன்று மட்டக்களபபில் வேண்டும்

ad+1

கிழக்கு மாகாணத்தைத் தழுவியதாக இந்தியத் துணைத் தூதரகமொன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் அமைக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை 07.11.2017 ஏறாவூரில்  பொது மக்கள் அமைப்பினர் சிலர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரை நேரில் சந்தித்து இது விடயமாகக் கலந்துரையாடிபோது அவர் தெரிவித்தார்.


தொடர்ந்தும்  அங்கு கருத்து தெரிவித்த முன்னாள் அவர்,
தமிழ்  பேசும் மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்து மக்கள் தமது  தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கொழும்பு  நோக்கியே செல்ல  வேண்டியுள்ளது.
இதனால் பல சிரமங்களை அவர்கள் எதிர்நோக்க நேரிடுவது தொடர்பில் மக்கள் பல தடவைகள் என்னிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
கிழக்கின் திருகோணமலை ,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழுகின்றனர்.
இவர்கள் வீசா மற்றும் ஏனைய தேவைகளுக்கு இந்திய தூதரகத்தை நாட வேண்டுமானால்  இலங்கையின் தலைநகர் கொழும்புக்கே செல்ல வேண்டியுள்ளது, கிழக்கில் உள்ள இந்துக்களும் பெரும்பாலும் தமது ஆன்மீகக் கடமைகளுக்கும் இந்தியா செல்கின்றனர்.

தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் மலையகத்தின் கண்டியிலும் வடக்கின் யாழ்ப்பாணத்திலும் இந்தியத் துணைத் தூதரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நாம்  கிழக்கு மாகாண சபை  ஆட்சியில் இருக்கும் போது முன்வைத்த திட்டங்களுக்கமைவாக இன்று மட்டக்களப்பில் சர்வதேச விமானநிலையமொன்றை அமைக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்,

எமது  திட்டவரைபுகளை அரசாங்கம் இன்று கவனத்திற்  கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது,

எதிர்கால கிழக்கை கட்டியெழுப்புதல் தொடர்பில்  மேலும் பல திட்டங்களையும் நாம் ஜனாதிபதி மற்றும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவிடம் கையளித்திருந்தோம் எனவே அதற்கமைய அந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என நாம் நம்புகின்றோம்' என்றார்.


0 comments: