விறகு வெட்டச்சென்றவர் சடலமாக மீட்பு !

ad+1

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை காட்டுப்பகுதிக்குள் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
அரசடித்தீவு கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான க.இராசரெத்தினம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அரசடித்தீவு கிராமத்தினைச் சேர்ந்த குறித்த நபர், தாந்தாமலையில் மேட்டுநிலப்பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் சிறிய விறகுகள் வெட்டுவதற்காக தாந்தாமலைப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார்.

அவ்வாறு சென்றவர் நேற்றிய தினம் மாலை வரை வீட்டிற்கு வருகை தராத நிலையில் அவரது குடும்பத்தினர் தேடியலைந்து வந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது, சடலத்தின் கையில் கத்தி காணப்பட்டுள்ளதுடன், அருகில் சிறிய விறகுகள் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments: