ஆசிரியரின் கழுத்தை அறுத்து செல்பி எடுத்துக் கொண்ட மாணவன்:

ad+1

ரஷ்யாவில் கல்லூரி மாணவன் ஒருவன் தமது ஆசிரியரின் கழுத்தை அறுத்து செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவனும் தற்கொலை செய்து கொண்டதால் Blue whale போன்ற இணையதள விளையாட்டாக இது இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.மாஸ்கோவில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருப்பவர் 44 வயதான Sergei Danilov. அனைத்து மாணவர்களிடமும் சகஜமாக பழகி வந்த இவர் தமது மாணவர் ஒருவரால் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணணி விளையாட்டில் அதீத ஈடுபாடு கொண்ட Andrey Emelyannikov(18) என்பவரால் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிந்துள்ள பொலிசார், ரஷ்யாவில் அதிகரித்துவரும் தற்கொலை குழு விளையாட்டில் குறித்த கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இதுவரை நூற்றுக்கணக்கான ரஷ்ய இளைஞர்கள் தற்கொலைக்கு காரணமான Blue Whale விளையாட்டு போலவே இதுவும் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் அது எந்த வகை விளையாட்டு என்பதை வெளியிட மறுத்துள்ளனர். சம்பவத்தன்று உணவு இடைவேளையின் போது ஆசிரியர் டானிலோவ் அருகாமையில் வந்த மாணவன், அவரது பின்னால் இருந்து பிளேடால் கழுத்தை அறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் துடி துடிக்க ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரது உடலின் அருகில் இருந்து செல்பி எடுத்துக் கொண்டதாகவும், பின்னர் ஒரு கத்தியால் தனது கழுத்தை துண்டித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments: