சிவஸ்ரீ உ.ஜெயகதீஸ்வர சர்மாவின் சிவாச்சாரிய அபிசேக (குரு பட்டமளிப்பு) வரவேற்பு

ad+1

மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய இந்துமதகுருவும்; மாவட்ட செயலக சித்தி விநாயகர் ஆலயம், அமிர்தகழி மாணிக்கப் பிள்ளையார் ஆலயம், வலையிறவு மாணிக்க விநாயகர் ஆலயம், கள்ளியங்காடு ஆஞ்சநேயர் ஆலயம் ஆகியவற்றின் பிரதமகுருவுமான சிவஸ்ரீ உ.ஜெயகதீஸ்வர சர்மாவின் சிவாச்சாரிய அபிசேக (குரு பட்டமளிப்பு) வரவேற்பு, மட்டக்களப்பு - கள்ளியன்காடு ஆஞ்சநேயர் ஆலயத்தில்  ஞாயிற்றுக்கிழமை  (12) மாலை நடைபெற்றது.

இந்த குரு வரவேற்பு நிகழ்வில், பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதகுருக்களும், பல்சமய ஒன்றியப் பிரதிநிதிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

சிவஸ்ரீ உ.ஜெயகதீஸ்வர சர்மாவின் சிவாச்சாரிய அபிசேக பட்டமளிப்பு, யாழ். உரும்பிராய் சிவஞான பாஸ்கரன் பிரம்மஸ்ரீ தாணு வாசுதேவ சிவாச்சாரியார் தலைமையில் சிவ தர்ம சாஸ்த்தா ஜயப்பன் ஆலயத்தில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்றிருந்தது.


0 comments: