உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக முதலிடம்

ad+1

போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ள உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் அரசியல், தொழில், நிர்வாகம் என பல துறைகளில் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை பிரபல பத்திரிக்கை போர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான பட்டியலில் ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தினை பிடித்ததன் மூலம் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் முதல் இடம் பெற்ற பெண்மணி எனும் சாதனையை படைத்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, பில்கேட்ஸ் பவுண்டேஷன் தலைவர் மெலிண்டா கேட்ஸ், பேஸ்புக் நிறுவனத்தின் ஷெரீல் சாண்ட்பெர்க் மற்றும் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் மேரி பாரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் 19வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: