அனல்மின் நிலையத்தில் விபத்து: 22 பேர் உடல் கருகி பலி

ad+1

உத்திரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதி கலன் வெடித்து சிதறியதில் 22 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.



ரேபரேலியில் உள்ள தேசிய அனல்மின் நிலையத்தில் உள்ள கொதிகலனே நேற்று வெடித்து சிதறியுள்ளது.

இதனால் கரும் வெளியேறியதில் 100க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.



0 comments: