11 ஆண்டுகளாக மகளை பலாத்காரம் செய்த தந்தை: குழந்தை பெற்ற பரிதாபம்

ad+1

11 ஆண்டுகளாக வளர்ப்பு மகளை தந்தை பலாத்காரம் செய்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண், குழந்தை பெற்றதையடுத்து தற்போது விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் இண்டோர் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.கடந்த 2007-ஆம் ஆண்டு சிறுமி ஒருவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார், குடும்ப வறுமை காரணமாக அவரால் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை.
இந்நிலையில், நபர் ஒருவர் சிறுமி வீட்டாரிடம் சென்று, சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று தந்தை ஸ்தானத்தில் வளர்க்க விரும்புவதாக கூற அவர்களும் சம்மதித்தனர்.

முதல் ஆறு மாதங்கள் சிறுமியை தனது மகள் போல பாவித்து வந்த வளர்ப்பு தந்தை பின்னர் அவரிடம் வரம்பு மீறியுள்ளார்.

தொடர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு பதினெட்டு வயதான நிலையில் தனது வீட்டை அவருக்கு எழுதி தருவதாகவும், பணப்பிரச்சனை வராமல் பார்த்து கொள்வதாகவும் கூறி தொடர்ந்து கற்பழித்துள்ளார்.

இதன் காரணமாக வளர்ப்பு மகள் கடந்த 2015-ல் கர்ப்பமடைந்த நிலையில் 2016-ல் பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் தனது வளர்ப்பு மகளையும் அவருக்கு பிறந்த குழந்தையையும் ஏற்று கொள்ளாத தந்தை அவர்களை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.
இதையடுத்து தனது சொந்த கிராமத்துக்கு வந்த பாதிக்கப்பட்ட பெண் நடந்த அனைத்து விடயங்களையும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது வளர்ப்பு தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.0 comments: