தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

ad+1

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனின் 10ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் நேற்று மாலை (2) அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் அவரது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ரி.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு தின வைபவத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிராந்திய அமைப்பாளர்கள் மற்றும் அதன் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது சு.ப.தமிழ்ச் செல்வனின் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் ஈகைச் சுடரேற்றப்பட்டு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதன்போது ஒரு நிமிட நேர மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது. சு.ப.தமிழ்ச்செல்வன் 2.11.2007ம் ஆண்டு வன்னியில் வைத்து இலங்கை வான் படையினரின் குண்டுதாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
0 comments: