காத்தான்குடியை மாநகர சபையாகவும் புதிய பிரதேச சபை உருவாக்கவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கலந்துரையாடல்

ad+1

தற்போதிருக்கும் காத்தான்குடி நகர சபையை மாநகர சபையாகவும், மற்றும் காத்தான்குடிப் பிரதேசத்தில் புதிய பிரதேச சபை ஒன்றையும் உருவாக்கு வகையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை 22.10.2017 புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றுள்ளது.

காத்தான்குடி மாநகர சபையை உருவாக்குதல் மற்றும் புதிய பிரதேச சபையை உருவாக்குவது தொடர்பான அறிக்கை அவரசமாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய இருப்பதனால் மேற்படி கலந்துரையாடல்  ஹிஸ்புல்லாஹ்;வின் கொழும்பு இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர், நகர சபை முன்னாள் உறுப்பினர் றவூப் அப்துல் மஜீட், காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சார்பில் தலைமை கிராம சேவக உத்தியோகத்தர் எம். ஜறூப், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சார்பில் சகோதரர் எம். பஹ்மி,  மற்றும் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஞாயிற்றக்கிழமை முழு நாளும் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் எல்லை நிர்ணயம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

0 comments: