Scroll To Top
News Trending

Google +

Powered by Blogger.

Ads Top

Featured Posts

Archive

Blog Archive

Subscribe Here

Slider

Slider

Video

Pasikudah Eco Village Hotel booking

Text Widget


Sample Text


Author

Labels

Logo

Tags

Recent Posts

About News16

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem. Pellentesque eu interdum ex, tempus volutpat massa.

Social Media

Pages

News

Ad 728x90

வீதியில் காணப்பட்ட பெரும் தொகைப் பணத்தை நேர்மையாக உரியவரை தேடிக் கண்டுபிடித்து கொடுத்த நபர்!!

வீதியில் கண்­டெ­டுத்த 4,11,000 ரூபா பணத்தை கண்டெடுத்த முச்­சக்­கர வண்டி சார­தி­யான விஸ்­வ­நாதன் பஞ்­ச­சீலன் கண்டி பொலி­ஸாரின் ஊடாக உரி­ய­வரை கண்­டு­பி­டித்து ஒப்­ப­டைத்த சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றிருக்கின்றது.

கண்டி நகரில் –முச்­சக்­க­ர­வண்டி செலுத்தும் இளை­ஞ­ரான விஸ்­வ­நாதன் பஞ்­ச­சீலன் தனது முச்­சக்­க­ர­வண்­டியை கண்டி நகரில் அமைந்­துள்ள ஸ்ரீ விக்­கி­ரம ராஜ­சிங்க மாவத்த வீதியில் நிறுத்த முற்­பட்­ட­போது அநா­த­ர­வான நிலையில் காணப்­பட்ட பார்சல் ஒன்றைக் கண்­டெ­டுத்­துள்ளார்.
அதனை சந்­தே­கத்தில் அவர் பிரித்து பார்த்த போது, அத­னுள் 4,11,000 ரூபா பணம் இருப்­பதை கண்டு அவர் அதனை உரி­ய­வ­ரிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­காக கண்டி பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்குச் சென்று பொலிஸ் உய­ர­தி­கா­ரி­க­ளிடம் விப­ரத்தை கூறி, அதனை அதன் உரி­மை­யா­ளரைக் கண்டு பிடித்து ஒப்­ப­டைக்க தான் விரும்­பு­வ­தாகத் தெரி­வித்து பணத்தை பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்­துள்ளார்.
பொலிஸார் பெரும் முயற்­சி­களைக் கொண்டு உரி­ய­வரை கண்டு பிடித்­தனர். அவர் காலி ஹினி­தும பிர­தே­சத்தைச் சேர்ந்த பிர­பல வர்த்­தகர் ஒரு­வ­ராவார்.
குறித்த வர்த்­தகர் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் தமது பிறந்த தினத்தை முன்­னிட்டு ஸ்ரீ தல­தா­மா­ளி­கைக்கு வழி­பா­டு­களில் கலந்து கொள்ளச் சென்­றுள்ளார்.
தமது வழி­­பாடு பூஜைகள் நிறை­வ­டைந்த பின்னர் அன்­றைய தினம் இரவை கண்­டியில் கழிக்க முற்­பட்டு விக்­கி­ர­ம­ரா­ஜ­சிங்க மாவத்­தையில், வாகன தரிப்­பி­டத்தில் தமது காரை நிறுத்தி விட்டு முச்­சக்­க­ர­வண்டி சாரதி ஒரு­வ­ரிடம் இரவு வேளை தங்­கு­வ­தற்­கான சிறந்த விடு­தி­களை கேட்­டுள்ளார்.
விப­ரங்­களை அறிந்து கொண்ட வர்த்­தகர் கண்டி வாவிக்­கரை அருகில் உள்ள விடுதி ஒன்­றுக்குச் சென்று அங்கு தனது காரை நிறுத்­தி­விட்டு தனது பணப்­பையை தேடி­யுள்ளார். ஆனால், அது இருக்­க­வில்லை.
இதே­வேளை, அவர் கண்­டிக்குச் செல்லும் வழியில் நிட்­டம்­பு­வயில் பகல் உண­வுக்­காக விடுதி ஒன்­றுக்கு சென்­றி­ருந்தார்.
தான் அங்­குதான் பணப்­பையை தவற­விட்­டி­ருக்­கலாம் எனக் கருதி அங்கு விரைந்து சென்று விசா­ரித்த போது விடு­தியின் சி.சி.டி.வி கெம­ராவை பார்த்­த­போது குறித்த வர்த்­தகர் பணப்­பை­யுடன் அங்­கி­ருந்து வெளி­யே­று­வது தெரிய வந்­துள்­ளது.
இதனால் அப்­பணம் தமக்கு கிடைக்கப் போவ­தில்லை என்று கருதி ஹினி­து­மைக்கு திரும்பி விட்டார். விஸ்­வ­நாதன் பஞ்­சீலன் கண்­டெடுத்த பணப் பொதியில் உரி­மை­யா­ளரின் தேசிய அடை­யாள அட்­டையும் காணப்­பட்­டுள்­ளது.
இதனைக் கொண்டு பொலிஸார் உரியவரை ஹினி­தும பொலிஸார் மூலம் தொடர்பு கொண்டு கண்­டிக்கு வர­வ­ழைத்து விசா­ரணை செய்த பின்னர் பொலிஸ் நிலைய தலைமை பொறுப்­ப­தி­காரி உரி­ய­வ­ரிடம் விஸ்­வ­நாதன் பஞ்­சீலன் மூலம் கைய­ளிக்கச் செய்­தனர்.
முச்­சக்­க­ர­வண்டி சாரதியான விஸ்வநாதனின் இந்த நேர்மையான செய்கையை பொலிஸ் அதிகாரிகளும்,குறிப்பிட்ட வர்த்தகரும் பாராட்டியதோடு, உரிமையாளரான வர்த்தகர் அவரின் நேர்மைக்காக 100,000 இலட்சம் ரூபா பணத்தை பரிசாக தொடுத்த போதும் அவர் அதனை பெரும் தன்மையோடு வாங்க மறுத்து விட்டார்.
நாட்டில் இவ்வாறானவர்கள் இருப்பதனால் தான் மழையே பெய்கின்றது. இவ்வாறான மனிதர்களுக்கு எத்தனை சல்யூட் அடித்தாலும் தகும்.


Share This:

Labels:

No Comment to " வீதியில் காணப்பட்ட பெரும் தொகைப் பணத்தை நேர்மையாக உரியவரை தேடிக் கண்டுபிடித்து கொடுத்த நபர்!! "