புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக நாட்டை ஸ்திர­மற்ற நிலைக்­குள்­ தள்ள சதி

ad+1

புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக நாட்டை ஸ்திர­மற்ற நிலைக்குத் கொண்டு செல்வதற்கு சதி­மு­யற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் இடம்­பெற்ற குழாய் கொள்­வ­னவு தொடர்பில் கொழும்பு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் தாக்­கல்­செய்­யப்­பட்­டுள்ள வழக்கு விசா­ர­ணைக்கு பஷில் ராஜ­பக்ஷ நேற்று வருகை தந்தார். அதன்­போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

உள்­ளூ­ராட்சிமன்றத் தேர்தல் நடை­பெறும் என எதிர்­பார்க்­கிறோம். ஆதலால் நாம் தேர்­த­லுக்குத் தயா­ரா­கிக்­கொண்­டி­ருக்­கிறோம். அர­சாங்கம் மேற்­கொள்ளும் மோசடி நட­வ­டிக்­கைகள், மக்­க­ளுக்­கான சலு­கை­களை இல்­லாது செய்­கின்­றமை, அர­சியல் பழி­வாங்கல், தேசிய வளங்­களை விற்­பனை செய்தல், புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்டு வந்து நாட்டை ஸ்திர­மற்ற நிலைக்கு கொண்டு செல்லுதல் உள்­ளிட்­ட­ செ­யற்­பா­டு­க­ளுக்கு எதி­ரான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பா­கவே குறித்த தேர்­தலை நோக்­கு­கிறோம்.

நாட்டில் இடம்­பெறும் ஜன­நா­யக விரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்­வி­னை­யாகக் கருதி சகல தேர்­தல்­க­ளையும் நாம் முகம்­கொ­டுப்­ப­தற்குத் தயா­ராக உள்ளோம். மேலும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யூ­டாகப் போட்­டி­யி­டு­வ­தற்கு ஏனைய கட்­சி­க­ளி­லுள்ள பலரும் விருப்பம் தெரி­வித்­துள்­ளனர். அத்­துடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடவுள்ள ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


0 comments: