இலகு தவணையில் சமுர்த்தி பயனுகரிக்கு காஸ்

ad+1

சமுர்த்தி திணைக்களமும் லாஃப்ஸ் கேஸ் பீஎல்சி நிறுவனமும் இணைந்து 'பிரஜா சவிய' எரிவாயு, எரிவாயு அடுப்பு வழங்கும் வேலைத்திட்டம் 31.10.2017 அன்று ஏறாவூர் பற்று பிரதேச செயலக வேப்பவெட்டுவான், பன்குடாவெளி, கொடுவாமடு,  ஆகிய கிராமங்களுக்கு முதல் கட்டமாக சமுர்த்தி பயனாளிகளுக்கு எரிவாயுவும், எரிவாயு அடுப்புக்கள் வழங்கப்பட்டது.
 


மாதம் ஒன்றிற்கு 886 ரூபாய் வீதம் 12 மாதங்களில் இலகுவாக செலுத்துவதற்காக சமுர்த்தி வங்கியூடாக கடன் வசதி செய்து கொடுக்கப்பட்டள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஜெயராஜ் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில் இத்திட்டத்தின் மூலம் வறிய சமுர்த்தி மக்கள் இலகு தவணை மூலம் இவ்வடுப்புக்களை பெறுவதன் மூலம் தம் அன்றாட வேலைப்பலுக்களை குறைத்துக் கொள்ள கூடியதாக இருக்கும் என்றும் இத்திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு லாஃப்ஸ் கேஸ் பீஎல்சி நிறுவனம் சமுர்த்தி திணைக்களத்துடன் இணைந்து செயற்படுவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியதுடன் முதல் கட்டமாக 1000 பொதிகள் மூன்று வங்கிகளுக்கும் முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளதாகவும்   அடுத்த கட்டமாக இன்னும் பல பயனுகரிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக் தெரிவித்துள்ளார். 

இனி வரும் மழை காலத்தில் வறிய மக்கள் விறகுகளை தேடி அலையாமல் 'பிரஜா சவிய' திட்டத்தில் இணைந்து பயனடையவர் என்பது பலரது கர்த்து.

செய்திகள் - கல்லடி ஜெயா
0 comments: