மக்களின் எதிர்ப்பினால் மணல் அகழ்வு இடைநிறுத்தம்

ad+1

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு,  குடத்தனை கிழக்கு பகுதியில் மணல் அகழ்வதற்கு பிரதேச செயலகத்தினூடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இன்று (26) முதல் மணல் அகழப்படவிருந்த நிலையில், அங்கு சென்ற குடத்தனை மக்கள் தமது எதிர்ப்பை வௌியிட்டனர்.

மணல்காடு கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு நான்கு அனுமதிப்பத்திரங்களும் குடத்தனை கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு மூன்று அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு அனுமதிப் பத்திரத்தினூடாக ஒரு மாதத்தில் 210 கியூப் மணல் அகழ முடியும் என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அங்கு மணல் அகழப்படுமாயின் விவசாயம் பாதிக்கப்படும் என்பதுடன் கடல்நீர் உட்புகும் அபாயமுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற மருதங்கேணி பிரதேச செயலாளர் மக்களுடன் கலந்துரையாடினார்.

இதனையடுத்து, நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை மணல் அகழ்வு முன்னெடுக்கப்பட மாட்டாது என மருதங்கேணி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவின் கங்கை காட்டுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட ஐந்து கனரக வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை அடுத்து நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சட்டவிரோத மணல் அகழ்வு தடுக்கப்பட்டுள்ளது


0 comments: