இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தொகுதி செயற்குழு உறுப்பினர்களின் சந்திப்பு

ad+1

(தாசன்)
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனை தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர்களுக்கான சந்திப்பு இன்று 21 கல்முனை ஜெயா மண்டபத்தில் நடைபெற்றது.இச்சந்திப்பானது இ.த.அ.கட்சியின் செயலாளர் ஆர்.துரைராஜசிங்கம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது இதன் போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ரீ.கலையரசன், ஆர்.இராஜேஸ்வரன், கட்சியின் மட்டக்களப்பு கிளை உறுப்பினர் எம். குருநாதன் மற்றும் கல்முனை பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்த கொண்டனர்.

இதன் போது காணிகள் நிர்ணயம் மாகாண மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் எல்லை நிர்ணயங்கள் மற்றும் எதிர்கால தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments: