சந்திரகாந்தனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ad+1

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் ஏனைய 6 பேருக்கு எதிராகவும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பிள்ளையான் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுமீதான விசாரணையின் போதே, நேற்று உயர்நீதிமன்றத்தில் இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில், பிள்ளையான் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டு, இதுவரை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் 31 தடவைகளாக ஆஜர் செய்யப்பட்டுள்ளார்  என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

0 comments: