ரயிலில் மோதுண்டு மாணவன் பலி

ad+1

வவுனியாவில் இன்று காலை 10.30 மணியளவில் கடுகதி ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மாணவன் ஒருவர் காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு ரயில் கடவையை கடக்க முயன்ற போதே  கடுகதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.


விபத்தில் உயிரிழந்தவர் வவுனியா அவுசுதுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 17வயதுடைய அமில சந்தகெலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது உயிரிழந்தவரின் சடலம் வவுனியா புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments: