வெறும் துவாயுடன் பேருந்தில் பயணிக்க முயன்ற இளைஞனால் கொழும்பில் பரபரப்பு!!

ad+1

நுகேகொடயில் துவாய் மாத்திரம் அணிந்து பேருந்தில் பயணிக்க முற்பட்ட இளைஞனால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.நுகேகொட பாலத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் துவாய் மாத்திரம் அணிந்து வந்த நபர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.மக்கள் அதிகமாக கூடியிருந்த சந்தர்ப்பத்திலேயே அந்த நபர் இவ்வாறு வந்துள்ளார். பின்னர் அவர் கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பேருந்துக்குள் நுழைந்துள்ளார்.

பேருந்துக்குள் மேலும் சில இளைஞர்களுடன் இந்த நபருக்கு வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. துவாய் மாத்திரம் அணிந்து வந்தமையினால் அந்த நபரை பேருந்தில் இருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் பேருந்தில் இருப்பதனால் பேருந்தை விட்டு வெளியேறுமாறு அந்த நபருக்கு இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தான் விரும்பியதனை போன்று வீதியில் செல்வதற்கான உரிமை தனக்கு உள்ளதாகவும், உடம்பின் மேல் பகுதியில் மாத்திரம் ஆடை இல்லாமல் செல்வதனால் யாருடைக்கும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை என துவாய் அணிந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனது உடல் அழகானதென்பதனால் மூடி மறைத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் வாதிட்டுள்ளார்.


0 comments: