ஏறாவூரில் முதன்முறையாக 'கட்டன பெரஹரா' ஊர்வலம்

ad+1

ஏறாவூர் நகரில் முதன் முறையாக ஏறாவூர் புலினதலாராமய விகாரையிலிருந்து ஏறாவூர் பொலிஸ் நிலைய மணிக்கூட்டுக் கோபுரச் சந்தி வரை 'கட்டன பெரஹரா' ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகளும் ஞாயிற்றுக்கிழமை 29.10.2017 இடம்பெற்றது.
தம்பிட்டிய விஹாராதிபதி ஞானானந்த தேரர் தலைமையில் இடம்பெற்ற இவ்வூர்வலத்தில் தம்பிட்டி, மஹாஓணா, மற்றும் ஏறாவூர் பிரதேச சிங்கள  தமிழ் மக்கள், ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள், மஹாஓயா வித்தியாலய சிங்கள மாணவர்கள்.  உட்பட சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

இதேவேளை வறிய குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தம்பிட்டிய பகுதி சிங்கள மாணவர்கள் மற்றும் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் சுமார் 400 பேருக்கு பாடசாலைக் கற்றல் உபகரணங்களும் ஏறாவூரைச் சேர்ந்த 35 கர்ப்பிணித் தாய்மாருக்கான உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டதாக தம்பிட்டிய விஹாராதிபதி ஞானானந்த தேரர் தெரிவித்தார்.

கிழக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2009ஆம் ஆண்டிலிருந்து சிங்கள பௌத்த மற்றும் தமிழ் மக்களின் நல்லிணக்க நலனோம்பு தொண்டுக்காக பரோபகாரிகளிடமிருந்து பெறும் உதவி மூலம் சுமார் 3 கோடி ரூபாவுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


0 comments: