சமுர்த்தி திணைக்களத்தின் ஊடகப் பிரிவினால் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஊடகப் பயிற்சி

ad+1

இலங்கை சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின்  ஊடகப் பிரிவினால் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கென வழங்கப்படும் ஊடகப் பயிற்சி திருகோணமலை, நிலாவெளி சமுர்த்தி பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை 26ஆம் திகதி மாலை 5 மணியளவில் ஆரம்பமானது.வியாழக்கிழமை 26ஆம் திகதி தொடக்கம் சனிக்கிழமை 28ஆம் திகதி வரை மூன்று நாட்கள் கொண்ட மேற்படி வதிவிடப் பயிற்சியின் ஆரம்ப நாளன்று சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி சாணக்க அபேசிங்கே, விரிவுரையாளர் தமிழ் பண்டிதர் மடுளுகிரியே விஜேரத்ன போன்றோர் கலந்துகொண்டு பயிற்சிகளையும் விரிவுரைகளை வழங்கினர்.


இந் நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் மற்றும் வேறு சில மாவட்டங்களை சேர்ந்த சுமார்  125  உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

சமுர்த்தி திணைக்களத்தின் ஊடகப்பிரிவில் இணைந்து பணியாற்றும்  ஊடக தொடர்பியலாளரகளின் தொடர்பாடல்களை மேம்படுத்தும் நோக்குடனும் திறன் விருத்திக்காகவும் மேற்படி பயிற்சி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


0 comments: