’உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்தவுடன் இணையமாட்டோம்’

ad+1

“எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, கூட்டுசேர்ந்து போட்டியிடாது. தமிழர் தரப்புடன் இணைந்து, தனித்தே போட்டியிடும்” என்று, முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தரைவருமான கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.“உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், எமது கட்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் கூட்டு சேர்ந்து போட்டியிடாது.  ஆனால், தேசிய ரீதியிலான தேர்தல்களில் மஹிந்த அணிக்கே எமது கட்சி, நிச்சியம் ஆதரவு வழங்கும்” என்று, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் வீ.கமலதாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

“எமது கட்சி, புதிய அரசமைப்பு சீர்திருத்தத்தை முற்றாக எதிர்க்கிறது. அதனை தோற்கடிக்க வேண்டும். அதற்காக மஹிந்த அணியினருடன் தேசிய ரீதியிலான செயற்பாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து செயற்படுவோம். உள்ளூராட்சி, மாகாண சபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் எமது கட்சி தனித்து போட்டியிடும். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த அணிக்கே ஆதரவு வழங்கும்.

“முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, புதனிகிழமை சந்தித்து இது தொடர்பான எமது இறுதி முடிவை அறிவித்துள்ளோம்“ என்றார்.0 comments: