அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்

ad+1

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் கே.சுகிர்தரன் தாக்கப்பட்டதை கண்டித்து செயலக உத்தியோகத்தர்கள் கறுப்பு பட்டியால் வாயை கட்டி செயலக முன்பாக இன்று (27) காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கிய மூவரும் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்து, சுமார் இரண்டு மணிநேரம் கடமையை புறக்கணித்து உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தான் நடவடிக்கை எடுப்பதாக என தெரிவித்தார்.

கிண்ணையடி துறையடி  வீட்டுத்திட்டத்தில் தாயொருவருக்கு வழங்கப்பட்ட வீட்டில் தாய் உயிரிழந்ததன் பின்னர், அந்த வீட்டினை அவரது பிள்ளைகள் இருவர் தங்களுக்கு வேண்டுமென தனித்தனியே உரிமை கோரிய நிலையில் இவர்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கிராம சேவை அதிகாரியுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சென்றிருந்த போதே அவரை தாக்கியுள்ளனர்.0 comments: