இரட்டைக் கொலையில் உயிரிழந்த மாணவனான மதுசானுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம்

ad+1

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள  சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைக் கொலையில் உயிரிழந்த மாணவனான பி.மதுசானுக்கு  நீதிகோரி  வெள்ளிக்கிழமை 20ம் திகதி காலை  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.கொலை செய்யப்பட்ட மாணவன் கல்வி பயின்ற  பாடசாலையான குடியிருப்பு கலைமகள் வித்தியாலய  பாடசாலயில் இருந்து  மாணவர்கள் மற்றும் பழையமாணவர்கள்  ஆசிரியர்களால் இந்த ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பில் இருந்து பேரணி ஆரம்பித்து மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள சிறுவர் நன்நடத்தை அலுவலகத்துக்கு  முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொலையாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் வலியுறுத்தியுள்ளனர்.0 comments: