தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தனித்து எமது படகுச் சின்னத்தில் போட்டியிடும்

ad+1

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தனித்து எமது படகுச் சின்னத்தில் போட்டியிடுவதென தீர்எமானித்னதுள்ளோம் என கட்சியின் பொதுச் செயலாளர் பி.பிரசாந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர்   கருத்துத் தெரிவிக்கையில்,மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் அதிகாரம் தேவை என்பதை மக்கள்  உணர்ந்துள்ளனர். அதனை வௌிப்படையாகவே கூறிவருகின்றனர்


எமது  மட்டக்களப்பு மாவட்டத்தின் குறிப்பாக மட்டக்களப்பு மாநகர சபை, ஆரையம்பதி பிரதேச சபை, செங்கலடி பிரதேச சபை, கோரளைப்பற்று, கோரளைப்பற்று வடக்கு உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் பலம் மேலோங்கப்பட்டாலே இப்பகுதிகளில் தமிழரின் இருப்பை பாதுகாக்க முடியும். இல்லையேல், அடுத்த ஐந்து வருடங்கனின் பின்னர் பல தமிழ் எல்லைக் கிராமங்களை வரைபடத்தில் மாத்திரமே பார்க்கும் சூழல் உருவாகும்

“சமுகத்தை நேசிக்கும் பல சமுக ஆர்வலர்களும் புத்திஜீவிகளும், இளைஞர்கள், மகளிர் என  பலர் தேர்தல் களத்தில் இறக்கப்படுவார்கள்”  எனவும் குறிப்பிட்டார்.


0 comments: