மட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டிய விழிப்புணர்வு ஊர்வலம்

ad+1

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டிய விழிப்புணர்வு ஊர்வலம் -2017 சனிக்கிழமை (21) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

மட்டக்களப்பு, திருகோணமலை நகர லயன்ஸ், லியோ கழகங்கள் மற்றும் நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள் வெள்ளைப்பிரம்பின் முக்கயத்துவத்தை வெளிப்படுத்தும் பதாதைகளைத் தாங்கியவாறு இவ் ஊர்வலத்தில் பலரும் கலந்துகொண்டனர்.


தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகி திருமலை வீதி வழியாக மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மண்டபம் வரை சென்றது.

கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.சி. அன்சார் தலைமையில் பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விழிப்புலனற்ற மாணவர்களின் கலை கலசார நிகழ்வுகள் இடம்பெற்றன.


0 comments: