மாகாண சபை உறுப்பினரும் அவரது மனைவியும் கைது

ad+1

திவுலபிட்டிய, துனகஹா, பல்லபான வீதியின் ஹேன்பிட்டகெதர பிரதேசத்தல் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவத்தையடுத்து மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.திவுலபிட்டிய, துனகஹா, பல்லபான வீதியின் ஹேன்பிட்டகெதர பிரதேசத்தல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும்  கொள்ளையாளர்கள் சிலருக்குமிடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்  உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தையடுத்து மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோ உட்பட 7 பேர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து வத்தைளையிலுள்ள குறித்த மாகாண சபை உறுப்பினரின் வீட்டை சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், அங்கிருந்து 115 தோட்டாக்கள், குண்டுதுளைக்காத அங்கி மற்றும் கைத்துப்பாக்கி வைக்ககப்பயன்படுத்தும் உறை அகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து வீட்டிலிருந்த மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிக்கோவின் மனைவியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கொள்ளையிடும் நோக்கில் குழு ஒன்று பிரவேசிக்கவிருப்பதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்திருந்தது.

இதற்கு அமைய வேன் ரக வாகனம் ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய வேளையில் அதில் இருந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இதன்போது அதிரடிப்படையினர் பதில் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மரணித்தவர் நாவலகே குசான் தக்சில குரே என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.0 comments: