மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 'ரணவிரு சேவா' குடும்பங்களின் நலனேம்பு விடயங்கள் சம்பந்தமான கலந்துரையாடல்

ad+1

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த படையினர் மற்றும் பொலிஸாரில் தங்கி வாழ்ந்த 'ரணவிரு சேவா' குடும்பங்களின் நலனோம்பு விடயங்கள் சம்பந்தமான கலந்தாலோசனைக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை 26.10.2017 இடம்பெற்றது.
'ரணவிரு சேவா' மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்திகா ஜயவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் 'ரணவிரு சேவா' நலனோம்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சமன் திலகரெத்ன 'ரணவிரு சேவா' குடும்பங்களின் உறவினர்கள் அக்குடும்பங்;களின் இளைஞர் யுவதிகள் உட்பட சுமார் 100 இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்;டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 'ரணவிரு சேவா' தமிழ் முஸ்லிம் சிங்கள குடும்பங்களுக்காக அமைக்கப்பட்டு வரும் 39 வீடுகளின் நிலைமை, மற்றும் எதிர்காலத்தில் இக்குடும்பங்களிலுள்ள இளைஞர் யுவதிகளின் வாழ்வாதார சுயதொழில் முயற்சிகளுக்கான உதவிகள், டிசெம்பெர் மாதம் இடம்பெறவுள்ள ரணவிரு நிகழ்வுகள் மற்றும் இன்ன பிற நலனோம்பு உதவிகள் குறித்தும் ஆராயப்பட்டது.0 comments: