ஓமந்தையில் கோர விபத்து! ஒருவர் படுகாயம்! பனை மரத்தை வேரோடு பிடுங்கிய டிப்பர்!

ad+1

வவுனியா – ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் இன்று (23.10) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஏ9 வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில்வேகக்கட்டுப்பாட்டை மீறி பனை மரத்துடன் மோதுண்டு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.டிப்பர் மோதியதால் பனை மரம் வேருடன் பிடுங்கி எறியப்பட்டது.இந்த விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: