வடகிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட சுதந்திரத்தை அவர்கள் மீளப் பெறவேண்டும். அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா

ad+1

கடந்த 30 வருட யுத்தத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் கடமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன். 30 வருட காலத்தில் பறிக்கப்பட்ட சுதந்திரத்தை அவர்கள் மீளப் பெறவேண்டும்.இந்த 30 வருட காலகட்டத்தில் குழந்தைகள் பெண்கள் என பலரும் யுத்த சூழ்நலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர், பலர் காடுகளுக்கு கடத்தப்பட்டனர், அவர்களிடமிருந்து சமுர்த்தி நிவாரணங்ளை பறித்தார்கள் ஆனால் தற்போது அந்த ஆயுத கலாசாரம் ஒழிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர். என சமுர்த்தி வலுவூட்டல், சமூக நலனோம்புதல் மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா தெரிவித்தார்.

இலங்கை சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின்  ஊடகப் பிரிவினால் சமுர்த்தி ஊடக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட ஊடகப் பயிற்சி திருகோணமலை, நிலாவெளி குச்சவெளி சமுர்த்தி பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை 26ஆம் திகதி தொடக்கம் ஞாயிற்றுக்கிமை 28ஆம் திகதி வரை மூன்று நாட்கள்  நடைபெற்றது. அங்கு நடைபெற்ற நிகழ்வின் கலந்துகொண்டு பயிற்சியில் பங்குகொண்ட உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா மேலும் குறிப்பிடுகையில்,
இறுதி யுத்த காலத்தில் இந்தியா, பாக்கிஸ்தான், ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஒன்று சேர்ந்து எமக்கு உதவி செய்தது. தமிழ்நாட்டில் கருணாநிதியின் எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்தியா எமக்கு உதவியளித்தது.

யுத்தம் முடிவுற்றதும் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சமீது கோபடைந்தனர். இதன் விளைவாக அவரை தமிழ் மக்கள் தேர்தலில் தோற்கடித்தார்கள் அதே வேளை  அமெரிக்கவையும் கோபித்துக்கொண்டார்கள்.

கடந்த இரண்டு வருட காலத்தில் சமுர்த்தி திட்டதின்மூலம் பயன்களைப் பெறுவதற்கு வடக்கு கிழக்கு மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி  வடகிழக்கிற்கு அதிகமாக புதிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதேபோன்று 390 உதவிப் பணிப்பாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர், மேலும் எதிர்காலத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிலிருந்து 70வீதமானோருக்கு சமுர்த்தி முகமையாளர்களாக பதவி உயர்வு வழங்க திட்டமிட்டுள்ளோம்.

கடந்த இரண்டு வருட காலத்தில் சமுர்த்தி பயனாளிகள் போதியளவு பயன்களை இத் திட்டத்தின் மூலம் பெறமுடியாமல் போயிருக்கலாம். இனிவரும் காலத்தில் சமுர்த்தி பயனாளிகளை கலாசாரம், சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், சமயம் போன்றவற்றை உயர்த்தி அவர்களடையே பாரிய சேமிப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கி அவர்ளை வலுடையச் செய்தே எமது முதலாவது திட்டமாகும்.


இந்த சமுர்த்தி திட்டங்களை மக்கள் மத்தியில்  தெளிவுபடுத்தி சமுர்த்தி பயனாளிகளை வலுப்படுத்தல் செயற்பாடுகளுக்காக சமுர்த்தி ஊடக உத்தியோகத்தர்கள் அற்பணிப்புடன் செயற்பட வேண்டும். இதற்கென இவர்களுக்கு மடிக்கணணி, ரப்ட்; போன்ற இலத்திரணியல் உபகரணங்கள் வழங்கப்படும்.

இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களில்தான் அதிக தனியார் நிதி நிறுவனங்கள் குறுநிதியாக கொள்ளை வட்டியில் கடன்களை வழங்கி வருகின்றது. மக்கள் மத்தியில் வட்டி வீதம் பற்றி ஒரு தெளிவு ஏற்பட வேண்டும். சமுர்த்தி உத்தியோகத்தரகள்; இவ்வாறானவர்களிடமிருந்து அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டும். எனவும் அவர் தெரிவித்தார்.0 comments: